கர்ப்பிணிகளுக்கு ஒற்றை தலைவலி பேராபத்து! எச்சரிக்கும் மருத்துவர்கள்

கர்ப்பிணிகளுக்கு ஒற்றை தலைவலி பேராபத்து! எச்சரிக்கும் மருத்துவர்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

கர்ப்பிணி பெண்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஒற்றைத் தலைவலிக்கு ஆளாகும் கர்ப்பிணிகள், பிரசவத்தில் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என்று டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அத்தகைய பிரச்சினைகள், பிரசவகால இரத்த அழுத்தம், கருச்சிதைவு ஆகியவற்றுடன் தொடர்புடையவையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர். அத்தகைய தாய்மாருக்குப் பிறக்கும் குழந்தைகளும் பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. குறைவான உடல் எடை, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் அவற்றுள் அடங்கும்.

கர்ப்பம் தரிக்கும் வயதுடைய பெண்களில் 25 சதவீதம் பேர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் புதுவகையான ஒரு தலைவலியை எதிர்கொள்ளும் போது, மருத்துவரை அணுகவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.