கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு எத்தனை கலோரிச் சத்துகள் தேவைப்படும்?

 

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு எத்தனை கலோரிச் சத்துகள் தேவைப்படும்?

சாதாரண நிலையில் ஒரு பெண்ணுக்கு 2200 கலோரியும், கர்ப்பக் காலத்தில் 2500 கலோரி சத்தும், பாலுாட்டும் காலத்தில் 3000 கலோரியும் தேவைப்படும்

சாதாரண நிலையில் ஒரு பெண்ணுக்கு 2200 கலோரியும், கர்ப்பக் காலத்தில் 2500 கலோரி சத்தும், பாலுாட்டும் காலத்தில் 3000 கலோரியும் தேவைப்படும்.

புரதம்

சாதாரண நாள்களில் 60 கிராமும், கர்ப்பக் காலத்தில் 85 கிராமும், பாலுாட்டும் போது 100 கிராமும் தேவை.

சுண்ணாம்பு

சாதாரண நாள்களில் 0.8 கிராமும், கர்ப்பக் காலத்தில் 1.5 கிராமும், பாலுாட்டும் போது 2  கிராமும் தேவை.

இரும்பு

சாதாரண நாள்களில் 20 மில்லி கிராமும், கர்ப்பக் காலத்தில் 40 மில்லி கிராமும், பாலுாட்டும்போது 30 மில்லி கிராமும் தேவை.

வைட்டமின் – பி

சாதாரண நாள்களில் 1.5 மில்லி கிராமும், கர்ப்பக் காலத்தில் 1.8 மில்லி கிராமும்,  பாலுாட்டும்போது 2.3 மில்லி கிராமும் தேவை.

வைட்டமின் – சி

சாதாரண நாள்களில் 70 மில்லி கிராமும், கர்ப்பக் காலத்தில் 100 மில்லி கிராமும்,  பாலுாட்டும்போது 100 மில்லி கிராமும் தேவை.

வைட்டமின் – ஏ

சாதாரண நாள்களில் 3000 மைக்ரோ  கிராமும், கர்ப்பக் காலத்தில் 3600 மைக்ரோ கிராமும்,  பாலுாட்டும்போது 4800 மைக்ரோ கிராமும் தேவை.

வைட்டமின் – டி

சாதாரண நாள்களில் 10 மைக்ரோ  கிராமும், கர்ப்பக் காலத்தில் 20 மைக்ரோ  கிராமும்,  பாலுாட்டும்போது 20 மைக்ரோ கிராமும் தேவை.

இந்த விகிதத்தில் உணவு முறை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: உடலில் கொழுப்பு சேர்வதற்குக் காரணம் என்ன?  எந்த மாதத்தில் இருந்து உடலில் கொழுப்பு சேர்கிறது?

ஆலோசனை: புரொஜஸ்டீரான் ஹார்மோனின் துாண்டுதல் காரணமாக உடல் கொழுப்பைச் சேகரிக்கிறது.  இவ்வாறு கொழுப்பைச் சேர்ப்பதற்கான உண்மைக் காரணம், தாய்க்குப் போதுமான உணவு கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்குத் தயார் நிலையில் இருப்பதற்குத்தான்.

கர்ப்பக் காலத்தில் உடலில் சேரும் கொழுப்புகள் பெரும்பாலும் உடல் பகுதியின் கீழ்ப்புறத்திலும், மேற்புறத் தொடைகளிலும் ஏற்படுகிறது.  இது இரண்டாவது மூன்றுமாத கருக்காலத்தின் மையப் பகுதியில் அதிகரிக்கிறது.  

கேள்வி: என்னுடைய உடல் எடை வெகுவேகமாக அதிகரித்துக் கொண்டே போகிறது.  என்னென்ன பொருள்களைத் தவிர்க்கவேண்டும்?  எதைக் குறைக்க வேண்டும்?  வாரத்துக்கு எவ்வளவு எடை உயர்வு இருக்கவேண்டும்?

ஆலோசனை: தேவையில்லாமல் எடை அதிகரிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.  புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாத அதிக கலோரிகள் உள்ள உணவுப் பொருள்களின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த உணவுகள், கிரீம்கள், இனிப்புகள், சாக்லேட்டுகள், சர்க்கரை, குளுக்கோஸ், கேக்குகள், மாவுப் பொருள்கள், ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கட்டுகள், ஜாம், தேன் மற்றும் தேன் கலந்த உணவுப் பொருள்களும் தவிர்க்கப்பட வேண்டும்.  இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடைப்பிடித்த பிறகும் எடை அதிகரித்தால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.  வாரத்துக்கு அரை கிலோவுக்கு மேல் எடை உயர்வது பிரச்னைக்குரியது.