கர்நாடகாவில் சிக்கிய 62 தமிழர்களை மீட்க உதவிய அமைச்சர் கே.பி.அன்பழகன்!

 

கர்நாடகாவில் சிக்கிய 62 தமிழர்களை மீட்க உதவிய அமைச்சர் கே.பி.அன்பழகன்!

தருமபுரி மாவட்டம் காரியமங்கலம், உத்தனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரும் கர்நாடக மாநிலத்தில் கூலி வேலை செய்யச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கர்நாடகாவில் சிக்கிய இந்த பகுதி மக்கள் தருமபுரி திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர்.

ஊரடங்கு காரணமாக கர்நாடகாவில் சிக்கித் தவித்த தருமபுரி மாவட்டத்தைச் சுர்ந்த 62 தொழிலாளர்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உதவியால் மீட்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரியமங்கலம், உத்தனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரும் கர்நாடக மாநிலத்தில் கூலி வேலை செய்யச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கர்நாடகாவில் சிக்கிய இந்த பகுதி மக்கள் தருமபுரி திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். அவர்களை மீட்டு சொந்த ஊரில் சேர்க்க வேண்டும் என்று பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டுக்கொண்டார்.

migrants-67

இதனைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட அமைப்பர் கே.பி.அன்பழகன் கர்நாடக மாநிலம் உடுப்பியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இரண்டு பஸ்களை அனுப்பினார். அந்த பஸ் மூலம் 62 தமிழர்கள் தருமபுரிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். அவர்கள் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தன் சொந்த செலவில் தொழிலாளர்களை மீட்ட அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு பலரும் பாராட்டுக்களைக் கூறி வருகின்றனர். தமிழகம் திரும்பிய தொழிலாளர்களும் நன்றி கூறினர்.