கர்நாடகாவில் இன்று திறக்கப்பட்ட மதுக்கடையில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை!

 

கர்நாடகாவில் இன்று திறக்கப்பட்ட மதுக்கடையில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை!

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். அதன்பின் மே..3 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். அதன்பின் மே..3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மே.17 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயியுள்ளனர். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

tasmac

கர்நாடகாவில் 598 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் குடிமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சுமார் ஒரு கி.மீ, தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றனர். மேலும் சிலர் போதையின் உச்சத்துக்கே சென்று மதுக்கடை திறந்த உற்சாகத்தில் வெடி வெடித்து கொண்டாடினர். 40 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட  மதுக்கடையில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மனதில்வைத்து தான் தமிழக அரசும் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.