கர்நாடகாவில் அதிருப்தி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் திடீர் ஆலோசனை – அதிர்ச்சியில் எடியூரப்பா

 

கர்நாடகாவில் அதிருப்தி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் திடீர் ஆலோசனை – அதிர்ச்சியில் எடியூரப்பா

கர்நாடக சட்டமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து எம்.எல்.ஏ-க்களை இழுந்து அவர்களை ராஜினாமா செய்ய வைத்து பெரும்பான்மையைப் பெற்றார் எடியூரப்பா. பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ சீட் மற்றும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது.

கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்று துடித்த எடியுரப்பாவுக்கு எதிராக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஒன்று சேர்ந்திருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கர்நாடக சட்டமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து எம்.எல்.ஏ-க்களை இழுந்து அவர்களை ராஜினாமா செய்ய வைத்து பெரும்பான்மையைப் பெற்றார் எடியூரப்பா. பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ சீட் மற்றும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. இதனால், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முடியாமல் தவித்து, தவிர்த்து வந்தார் எடியூரப்பா.
ஒரு வழியாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து தாவிய 10 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், பா.ஜ.க-வின் பல சீனியர் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

yeddyurappa

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி இல்லாதது, எடியூரப்பாவின் மகனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவை எம்.எல்.ஏக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கர்நாடக அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் நடந்துள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர்.
தனக்கு எதிரான ஆலோசனைக் கூட்டம் தன்னுடைய அமைச்சர் ஒருவரின் வீட்டிலேயே நடந்திருப்பது எடியூரப்பாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறையாவது முழுமையாக ஆட்சியில் தொடரலாம் என்று பக்காவாக திட்டமிட்டு எதிர்க்கட்சியிலிருந்து எம்.எல்.ஏ-க்களை இழுத்தவர், சொந்த கட்சி எம்.எல்.ஏ-க்களை கையாளா முடியாமல் திணறி வருகிறார். எப்போது ஆட்சி கவிழுமோ என்ற கலக்கத்தில் நிம்மதியின்றி எடியூரப்பா இருக்கிறார். இதனால், கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள், பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.