கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு?! இந்திய விஞ்ஞானி தலைமையில் மும்முரம்!

கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு?! இந்திய விஞ்ஞானி தலைமையில் மும்முரம்!

சீனா தரும் கணக்கின்படியே இதுவரை 563 பேர் இறந்து இருப்பதாகவும் 28018 பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இப்படி உலகையே மிரட்டி வரும் கரோனா வைரசை ஆஸ்த்திரேலிய டோகாட்டி இன்ஸ்ட்டியூட்டில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வளர்த்தெடுத்து ஆய்வு செய்து வருகிறது இந்த சி.எஸ்.ஐ.ஆர்.ஓ ஆராய்ச்சியாளர்கள் குழு.

ஆஸ்த்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு, காமன் வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம். சி.எஸ்.ஐ.ஆர்.ஓ எனப்படும் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான குழு உலகையே மிரட்டிவரும் கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து இருக்கிறது. 

சீனா தரும் கணக்கின்படியே இதுவரை 563 பேர் இறந்து இருப்பதாகவும் 28018 பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இப்படி உலகையே மிரட்டி வரும் கரோனா வைரசை ஆஸ்த்திரேலிய டோகாட்டி இன்ஸ்ட்டியூட்டில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வளர்த்தெடுத்து ஆய்வு செய்து வருகிறது இந்த சி.எஸ்.ஐ.ஆர்.ஓ ஆராய்ச்சியாளர்கள் குழு.

professor-ss-vasan-01

இதுபற்றி விஞ்ஞானி எஸ்.எஸ் வாசன் கூறும்போது ” குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்துடன் இணைந்து இந்த மருந்தைக் கண்டுபிடித்து இருக்கிறோம், இப்போது ஆரம்ப நிலையில்தான் இருக்கிறோம். இன்னும் 16 வாரங்களில் மனிதர்களுக்கு இந்த மருந்தை அளித்து சோதனை செய்வோம்” என்கிறார்.பிட்ஸ் பிலானியிலும்,பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சியிலும் படித்த வாசன் இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்றவர்.

ஆப்பிரிக்காவை அச்சுருத்திய எபோலா வைரஸ் குறித்த ஆய்வுக்காக பல்வேறு விருதுகள் பெற்றவர் இவர்.உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடித்த குழுவின் தலைவர் ஒரு இந்தியர் என்பது எல்லா இந்தியருக்கும் பெருமைதானே.