கரைந்து கொண்டே அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்த காகங்கள்: அதிர்ச்சியில் மீனவ குடும்பங்கள்!

 

கரைந்து கொண்டே அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்த காகங்கள்: அதிர்ச்சியில் மீனவ குடும்பங்கள்!

தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்களின் குடும்பங்கள் வசிக்கும் பகுதியை சுற்றி சிறிது நேரமாக காகங்கள் கரைந்து கொண்டே இருந்திருக்கின்றன. இதனால் மீனவர்கள் சிலர் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த போது மரத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொரு காகமாக சுருண்டு கீழே விழுந்து இறந்துள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட காகங்கள் அவ்வாறு இறந்தது மட்டும் இல்லாமல் அங்கிருந்து 3 நாய்களும் உயிரிழந்துள்ளன. 

ttn

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், வீடுகளை சுற்றி மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளித்து விட்டு உயிரிழந்த காகங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். பின்னர், இது தொடர்பாக மீனவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விஷம் வைத்து அவை கொல்லப்பட்டதா அல்லது ஏதேனும் நோய்த்தொற்று பரவியுள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் இந்த சூழலில் காகங்கள் திடீரென் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.