கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர்: டிடிவி தினகரன் காட்டம்!

 

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர்: டிடிவி  தினகரன் காட்டம்!

மோசடி கணிப்புகளைப் புறந்தள்ளி,  வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று தனது தொண்டர்களுக்கு டிடிவி  தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சென்னை:  மோசடி கணிப்புகளைப் புறந்தள்ளி,  வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று தனது தொண்டர்களுக்கு டிடிவி  தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

stalin

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளைத் தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அதில் பாஜகவே கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும்  கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மற்ற கட்சியினர் கலக்கமும் கோபமும் கொண்டுள்ளனர். 

 

இந்நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக மக்கள் அதிமுகவையும், திமுகவையும் புறந்தள்ளி அமமுகவின் பரிசு பெட்டகம் சின்னத்துக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளனர்.  

edapaadi

மேலும் அமமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகளைத் தொண்டர்கள் புறந்தள்ளிவிட்டு, விழிப்புடன் வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்’  என்று  டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.