கருணாஸ் கைது விவகாரம்: சபாநாயகருக்கு தகவல் கூறும் காவல்துறை?

 

கருணாஸ் கைது விவகாரம்: சபாநாயகருக்கு தகவல் கூறும் காவல்துறை?

திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டது பற்றி, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று முறைப்படி சபாநாயகரிடம் தெரிவிக்க உள்ளனர்.

சென்னை: திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டது பற்றி, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று முறைப்படி சபாநாயகரிடம் தெரிவிக்க உள்ளனர். 

முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கருணாஸை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று  கைது செய்தனர்.

அதன்பின் அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியான கோபிநாத் இல்லத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, கருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்தார். மேலும் அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கருணாஸை வைக்குமாறு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

tn speaker

இந்நிலையில் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டால், சட்டமன்ற விதி 288 மற்றும் 289-ன் கீழ் சபாநாயகரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதாவது என்ன வழக்கு போடப்பட்டுள்ளது, எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டியது அவசியம். அதன்படி, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று முறைப்படி சபாநாயகர் தனபாலிடம் தெரிவிக்க உள்ளனர்.