‘கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி’ – 4 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் வருகிறார் சோனியா

 

‘கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி’ – 4 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் வருகிறார் சோனியா

முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகை தர இருப்பதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

சென்னை: முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகை தர இருப்பதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை அமைக்க திமுக தலைமை முடிவு செய்தது.

அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 8 அடி உயர கருணாநிதி சிலை உருவாக்கம் செய்யப்பட்டது. இந்த பணிகளை சிற்பி தீனதயாளன் என்பவர் செய்து முடித்துள்ளார்.

sonia

இந்த சிலை திறப்பு விழா வருகின்ற டிசம்பர் 16-ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்திற்கு இன்று சோனியா எழுதியுள்ள பதில் கடிதத்தில், “தமிழக மண்ணின் தலைசிறந்த மைந்தரான கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்க இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டிற்குப் பின் தற்போது தான் சோனியா தமிழகத்திற்கு வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.