கருணாநிதி, எம்ஜிஆரிடமெல்லாம் சாதி இல்லையா? சீமான் கேள்வி

 

கருணாநிதி, எம்ஜிஆரிடமெல்லாம் சாதி இல்லையா? சீமான் கேள்வி

திருமாவளவன், சீமான், ராமதாஸிடம் சாதி என்னவென்று கேட்பவர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆரிடம் கேட்டதுண்டா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமநாதபுரம்: திருமாவளவன், சீமான், ராமதாஸிடம் சாதி என்னவென்று கேட்பவர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆரிடம் கேட்டதுண்டா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்ற முழக்கத்தோடு தந்தை பெரியார் தொடங்கி கலைஞர் கருணாநிதி வரை அனைவரும் தமிழர்கள் இல்லை என திராவிட கட்சிகளுக்கும், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிரகாவும் பேசி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரது பேச்சை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டாலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் சாதிய ரீதியாக பார்க்கின்றனர், யார்? யார்? தமிழர்கள் இல்லை என அவர்களே டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கின்றனர் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், சீமான், திருமாவளவன், ராமதாஸ் இவர்களுக்கு மட்டும்தான் சாதியா. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் எல்லாம் சாதி இல்லையா. தமிழர்கள் வந்தால் சாதி கேட்கிறார்கள், மற்ற மாநிலத்தவர்கள் வந்தால் மட்டும் தலைவனாகவே ஏற்றுக் கொள்கிறார்கள். எம்ஜிஆரிடம் சாதி என்ன என கேட்டிருந்தால் அவர் ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஆகியிருந்திருக்க மாட்டார் என்றார்.