கருணாநிதி அமேசான் நதி போன்று கடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறார்- கவிஞர் வைரமுத்து 

கருணாநிதி அமேசான் நதி போன்று கடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறார்- கவிஞர் வைரமுத்து 

மரணம் என்ற கடலுக்குள் கலைஞர் சங்கமித்தாலும், அமேசான் நதி போன்று கடலுக்குள் நன்னீராக பயணிக்கிறார் கலைஞர் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருஉருவச்சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றுவருகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்து, “கலைஞர் தமிழ் இனத்தின் அடையாளம்.. மரணம் என்ற கடலுக்குள் கலைஞர் சங்கமித்தாலும், அமேசான் நதி போன்று கடலுக்குள் நன்னீராக பயணிக்கிறார் கலைஞர்.

கலைஞர் என்ற சதை உடம்பு மறைந்திருந்தாலும், அவர் தத்துவ உடம்பாக மாறியிருக்கிறார். தமிழ், தமிழகம், திருவள்ளுவர், வள்ளுவர் கோட்டம், விதவை மறுவாழ்வு திட்டம், சமத்துவபுரம், உழவர்சந்தை என அவர் தமிழ்நாட்டில் செயல்படுத்திய திட்டங்கள்தான் அவரின் நினைவுச்சின்னம்.

4168 பக்கங்கள் ‘சுயசரிதை’ எழுதிய ஒரு தலைவர் கலைஞரை தவிர வேறேவரும் இந்த உலகிலேயே கிடையாது. 12 முதலமைச்சவர்களுடன் அரசியல் செய்தவர் கலைஞர்.மாநில முதல்வர்களுக்கும் கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். தேசிய கொடி கயிற்றின் ஒரு நுனியில் கொடியெனில், மறுநொடியில் கலைஞரின் புகழ் இருக்கும்.

சேலம் உருக்காலையை கொண்டு வந்தவர் கலைஞர். மொழியை போல், தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தந்தவர் கலைஞர். உழவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்த உழவர்களின் நண்பனாக திகழ்ந்தவர் கலைஞர்.தமிழ் நம் இன அடையாளம். கலைஞர் அந்த இனத்தின் அடையாளம்” என பேசினார்.