கருணாநிதியும்… கருப்புக்கண்ணாடியும்..! 

 

கருணாநிதியும்… கருப்புக்கண்ணாடியும்..! 

எம்ஜிஆர் என்றதும் எப்படி தொப்பியும், கருப்பு கண்ணாடியும், சட்டென நினைவுக்கு வருமோ அப்படி, கலைஞர் கருணாநிதி என்றதும் அனைத்து மக்களுக்குமே நினைவுக்கு வருவது அவரின் கருப்பு கண்ணாடிதான்

கருணாநிதியும்… கருப்புக்கண்ணாடியும்..! 

எம்ஜிஆர் என்றதும் எப்படி தொப்பியும், கருப்பு கண்ணாடியும், சட்டென நினைவுக்கு வருமோ அப்படி, கலைஞர் கருணாநிதி என்றதும் அனைத்து மக்களுக்குமே நினைவுக்கு வருவது அவரின் கருப்பு கண்ணாடிதான். இந்த கருப்பு கண்ணாடி ஸ்டைலுக்காகவோ, அடையாளத்திற்காகவோ போடவில்லை…. கண்ணாடிக்கு பின்னால் பெரிய கதையும், வலியும் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

கடந்த 1955-ம் ஆண்டு நடந்த பரமக்குடியில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் பங்கேற்றுவிட்டு கருணாநிதி காரில் திருச்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கருணாநிதியின் இடது கண் பாதிக்கப்பட்டு, அவருக்கு  ஆபரேஷன் நடத்தப்பட்டது. அதன்பிறகு 1967 ஆம் ஆண்டு அவர் மீண்டும் ஓர் விபத்தில் சிக்கினார். அப்போது அவரது இடது கண்ணில் அடிபட்டு பாதிப்புக்குள்ளானார். 

அதன் பிறகு 1971ல் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹிப்கின் என்ற மருத்துவமனையில் கருணாநிதிக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அதன் பிறகு அதிக பவருடன் கூடிய கருப்புக் கண்ணாடியை அணிய ஆரம்பித்தார். அப்போது முதல் 47 ஆண்டுகளாக ஒரே கண்ணாடியைத் தான் அவர் அணிந்து வந்தார்.