கருணாநிதியின் சொந்த வார்டில் மலர்ந்த தாமரை! விரக்தியில் திமுக!! 

 

கருணாநிதியின் சொந்த வார்டில் மலர்ந்த தாமரை! விரக்தியில் திமுக!! 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி நேற்று மாலைவரை நடைபெற்றது.  இதில் திமுக கூட்டணி மாவட்ட கவுன்சிலர் பதவியிலும், ஊராட்சி ஒன்றியத்துக்கான பதவிகளிலும் அதிகமான வாக்குகள் வெற்றி வெற்றிப்பெற்றது. 

karunanidhi

இருப்பினும், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக மூத்த தலைவருமான கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கோட்டூட் ஒன்றியத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி பிறந்து வளர்ந்த கோட்டூர் 5 ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட அரவிந்தன் என்பவர் வெற்றிப்பெற்றுள்ளார். மேலும் அந்த தொகுதியில் நின்ற திமுக வேட்பாளர் தோல்வியை தழுவியுள்ளார்.