கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளன் விருது பெற்றதற்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து !

 

கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளன் விருது பெற்றதற்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து !

தமிழின் சிறந்த நாவலுக்கான சாகித்திய அகாடமி விருது, சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ என்னும் நாவலுக்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளியான சோ.தர்மனின் இயற்பெயர் சோ.தர்ம ராஜ். இவர் சோ.தர்மன் என்ற பெயரில் பல்வேறு நாவல்களை எழுதி வருகிறார். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை எழுதியுள்ளார். இவரின் படைப்புகளுக்கு ஏற்கனவே அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

ttn

1992 மற்றும் 1994 ஆம் ஆண்டு இலக்கிய சிந்தனையின் சிறந்த சிறுகதைகளுக்கான விருதைப் பெற்றார். அதுமட்டுமில்லாமல், 2005 ஆம் ஆண்டு இவரின் ‘கூகை’ என்னும் நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. தமிழின் சிறந்த நாவலுக்கான சாகித்திய அகாடமி விருது, இவர் எழுதிய ‘சூல்’ என்னும் நாவலுக்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுவதற்காகத் தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாக சோ.தர்மன் நேற்று தெரிவித்தார். அவருக்கும் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் சோ.தர்மனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” கரிசல் மண்ணையும் மக்களையும் குழைத்து தனது எழுதுகோலில்  நுழைத்து, படைப்புகளை உருவாக்கும் சோ.தர்மனின் ‘சூல்’ நாவலுக்கு சாகத்திய அகாடமி விருது கிடைத்துள்ளது அறிந்து அவரைப் பாராட்டுகிறேன்! இப்பரிசின் மூலமாக உற்சாகம் அடைவார்; மேலும் பல படைப்புகளை வழங்குவார். வாழ்த்துகள்! ” என்று பதிவிட்டுள்ளார்.