கம்போடியா நாட்டு பாடப் புத்தகத்தில் திருக்குறள்: தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!

 

கம்போடியா நாட்டு பாடப் புத்தகத்தில் திருக்குறள்: தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!

தமிழகத்தில் உள்ள பல்லவ சிற்பங்கள் மூலம்  கேமர் பேரரசுக்கும், பல்லவ பேரரசுக்கும் தொடர்புள்ளது என்பதை  அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

கம்போடியா பள்ளி பாடப்புத்தகங்களில் திருக்குறள் இடம்பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 திருக்குறள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் தமிழர்கள் ஆட்சி புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் மார்ன் சொப்ஹீப் சமீபத்தில்  தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது பேசிய அவர்,மாமல்லபுரத்தில் உள்ள கற்கால சிற்பங்களின் வாயிலாக 6ம் நூற்றாண்டு காலத்தில் காஞ்சி புரத்தை ஆட்சி செய்த பல்லவ அரசை ஆண்ட மகேந்திர வர்மன் தான் தற்போதைய கம்போடியாவின் கேமர் பேரரசை ஆட்சி புரிந்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், தமிழகத்தில் உள்ள பல்லவ சிற்பங்கள் மூலம்  கேமர் பேரரசுக்கும், பல்லவ பேரரசுக்கும் தொடர்புள்ளது என்பதை  அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், ராஜேந்திர சோழனுக்கு  தங்கள் நாட்டில் சிலை வைக்க உள்ளதாகவும், உலகப் பொதுமறையான திருக்குறளை கேமர் மொழியில் மொழிபெயர்த்து கம்போடியா நாட்டுப் பள்ளி பாட நூல்களில் சேர்க்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

tirukural

இந்நிலையில், உலகப்பொதுமறையான திருக்குறள் அங்குள்ள பள்ளிப்பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.   தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தும் விதத்திலும், இருநாடுகளுக்கிடையேயான உறவைப் பலப்படுத்தும் வகையிலும் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் உலகத்தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.