கமல் இல்லத்தில் அண்ணனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்…!

 

கமல் இல்லத்தில் அண்ணனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்…!

இளையராஜா, லதா ரஜினிகாந்த்  உள்ளிட்டவர்களும்,  உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

நடிகரும்  மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான கமல் ஹாசனின் மூத்த அண்ணன்   சாருஹாசன் நேற்று தனது 90வது  பிறந்தநாளை கொண்டாடினார்.  

ttn

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் ஹாசன் இல்லத்தில்  மிக சிறப்பான முறையில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் இளையராஜா, லதா ரஜினிகாந்த்  உள்ளிட்டவர்களும்,  உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

ttn

இதுகுறித்து கமல் ஹாசன் தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான்’ என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.