கமல்,ரஜினி,இளையராஜா,பஞ்சு அருணாச்சலம், மகேந்திரன் இணைந்து நடிப்பதாக இருந்த மல்டி ஸ்டார் படம்!

 

கமல்,ரஜினி,இளையராஜா,பஞ்சு அருணாச்சலம், மகேந்திரன் இணைந்து நடிப்பதாக இருந்த மல்டி ஸ்டார் படம்!

கதாசிரியர் பஞ்சு அருணாசலம் – இயக்குநர் மகேந்திரன் – இசையமைப்பாளர் இளையராஜா
மூவரும் நாயகர்களாக நடிக்க இருந்த படம் ஒன்று துவங்கப்பட்டு பின்னர் அது டிராப் பண்ணப்பட்டது

சென்னை:  கதாசிரியர் பஞ்சு அருணாசலம் – இயக்குநர் மகேந்திரன் – இசையமைப்பாளர் இளையராஜா
மூவரும் நாயகர்களாக நடிக்க இருந்த படம் ஒன்று துவங்கப்பட்டு பின்னர் அது டிராப் பண்ணப்பட்டது என்று சொன்னால், மகேந்திரன் மறுபையும் பொறந்து வந்து மறுக்கவா போறார்? சும்மா அடிச்சி விடுங்க தம்பி என்று கமெண்ட் போடத் துடிப்பீர்கள். ஆனால் சம்பவம் நடந்தது உண்மை.

“நாம மூவருமே அவங்கவங்க துறையில் முன்னுக்கு வந்திட்டிருக்கோம், ஆனால் பத்திரிகையாளர் ஒருவர் நம்மைப் பற்றித் தப்பாகவே எழுதிக் கொண்டு வருகிறார். இதைப் பொறுக்க முடியாமல் அவனை நேரில் பார்த்தோம்… சும்மா விடமாட்டோம் என்று பொது இடத்தில் வைத்து நம் கோபத்தைக் காட்டுகிறோம். இதற்கிடையில் அந்தப் பத்திரிகையாளரை யாரோ ஒருவர் கொலை செய்து விட, கொலைப்பழி நம்மூவர் மேல் விழுகிறது”

mahendran

இப்படியாகப் பஞ்சு அருணாசலம் கதை பண்ணி இயக்குநர் மகேந்திரன், இசைஞானி இளையராஜாவிடம் அதைச் சொல்லி ஒப்புதலும் வாங்கிப் பத்திரிகையில் கூட பட விளம்பரம் போட்டாச்சாம். ஆங்கிலப் படங்களில் இது மாதிரி நிறையக் கதைக் கருவோடு வருவதால் தமிழுக்கு இதையொத்த லட்சுமி காந்தன் கொலை வழக்கும் அதில் சிக்குண்ட தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோரை முன் மாதிரியாக வைத்து அந்தக் காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பின்னணித் திரைக்கதையும் அமைத்து விட்டார் பஞ்சு அருணாசலம்.

ilaiyaraja

பஞ்சு அருணாசலம், மகேந்திரன், இளையராஜா தரப்பு வழக்கறிஞராகக் கமல்ஹாசன், அரசு தரப்பு வழக்கறிஞராக ரஜினிகாந்த் என்று பெரும் எடுப்பில் போடப்பட்டது இந்தப் பட உருவாக்கத் திட்டம்.

ஆனால் பட விளம்பரங்களைப் பார்த்து விட்டு 
”நீங்க எல்லாருமே அவங்கவங்க துறையில் 
பரபரப்பாக இயங்குற நேரம் 
ஏன் உங்களுக்கு வேண்டாத வேலை” 
என்று நலன் விரும்பிகள் ஆதங்கப்பட்டார்களாம்.

panju

சரி நாம தானே ஆரம்பிச்சோம் நாமளே முடிச்சு வைப்போம் என்று பஞ்சு அருணாசலம், மகேந்திரன், இளையராஜா அந்தத் திட்டத்தைக் கை விட்டார்களாம்.இது மாதிரிப் பல திரை முயற்சிகள் பூஜையோடே நிறுத்தப்பட்டன என்பது வரலாறு.

இப்போதும் இதை நம்ப யோசிப்பவர்கள் பஞ்சு அருணாச்சலம் எழுதியுள்ள ‘திரைத்தொண்டர்’ புத்தகம் வாங்கிப்படியுங்கள். கண்டிப்பாக நம்புவீர்கள்.

இதையும் வாசிக்க: நயன்தாரா நடிச்சால் நடிக்கிறேன்,அடம் பிடித்த சிவகார்த்திகேயன்! மிஸ்டர் லோக்கலின் சீக்ரெட்!?