கமலுடன் இணைவதா? ரஜினிக்கு அட்வைஸ் சொன்ன துக்ளக் குரு மூர்த்தி

 

கமலுடன் இணைவதா? ரஜினிக்கு அட்வைஸ் சொன்ன துக்ளக் குரு மூர்த்தி

அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்துவிட நரிக்கணக்கு போடுகிறார்

ரஜினியும்  கமலும் மக்கள்நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று  தெரிவித்துள்ளனர். இது தமிழகத்தில் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் விமர்சனங்களையும்  வைத்து வருகின்றனர்.

kamal

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்ற   துக்ளக் ஆசிரியர்  குரு மூர்த்தி அவரை சந்தித்து பேசினார்.

kamal

ரஜினி_கமல் இணைவு குறித்து சுமார் ஒரு மணி நேரம்  ஆலோசனை நடத்திய அவர், ரஜினியை பாஜகவில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

gurumurthy

ரஜினியும் கமலும்  திரைத்துறை நண்பர்களாக பல ஆண்டுக்காலம் பயணித்து வரும் நிலையில் அவர்கள் இணைந்து அரசியல் செய்வது என்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது என்று அவர்களின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக  நமது அம்மா நாளிதழ் சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்றுவிட்ட கமல், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்துவிட நரிக்கணக்கு போடுகிறார் என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.