கன்னட நடிகர் அம்பரீஷ் உடலை பார்த்து கதறி அழுத ரஜினி! – வீடியோ

 

கன்னட நடிகர் அம்பரீஷ் உடலை பார்த்து கதறி அழுத ரஜினி! – வீடியோ

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெங்களூரு சென்ற நடிகர் ரஜினி, அம்பரீஷ் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெங்களூரு சென்ற நடிகர் ரஜினி, அம்பரீஷ் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் (66), பெங்களூருவில் நேற்று இரவு காலமானார். சிறுநீரக நோய் காரணமாக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் உடல்நிலை தேறிய நிலையில்  பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு11 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

ambrish

அம்பரீஷின் மறைவையொட்டி, கர்நாடகாவில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அவரின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்த நடிகர் ரஜினி, “நல்ல மனிதர், ஆருயிர் நண்பரை இழந்துவிட்டேன்” என குறிப்பிட்டிருந்தார்.

அதோடு இன்றி, பெங்களூருவில் வைக்கப்பட்டிருக்கும் அம்பரிஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த நடிகர் ரஜினி, அம்பரீஷ் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம், அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.