கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: துணை ஜனாதிபதி வழங்கினார்

 

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: துணை ஜனாதிபதி வழங்கினார்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டுள்ளது.

லோக்மத் செய்திநிறுவனம் சார்பில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுக்கு திமுக எம்.பி கனிமொழியின் பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக மு.க.கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சரத் பவார் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.