கனவு புல்லட்டை பறிமுதல் செய்த போலீஸ்… சரண் அடைந்த கஞ்சா வியாபாரி!

 

கனவு புல்லட்டை பறிமுதல் செய்த போலீஸ்… சரண் அடைந்த கஞ்சா வியாபாரி!

கஞ்சா விற்றது தொடர்பாக விசாரணைக்கு சென்றபோது போலீசாரை தள்ளிவிட்டுத் தப்பிய கஞ்சா வியாபாரி, தன்னுடைய கனவு வாகனமான புல்லட்டை பறிமுதல் செய்துவிட்டார்கள் என்று தகவல் அறிந்ததும் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனை செய்பவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது லாரி ஓட்டுநராக இருந்துகொண்டு கஞ்சா விற்பனை செய்துவந்த வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் மேலும் நான்கு பேர் கஞ்சா விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

கஞ்சா விற்றது தொடர்பாக விசாரணைக்கு சென்றபோது போலீசாரை தள்ளிவிட்டுத் தப்பிய கஞ்சா வியாபாரி, தன்னுடைய கனவு வாகனமான புல்லட்டை பறிமுதல் செய்துவிட்டார்கள் என்று தகவல் அறிந்ததும் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனை செய்பவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது லாரி ஓட்டுநராக இருந்துகொண்டு கஞ்சா விற்பனை செய்துவந்த வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் மேலும் நான்கு பேர் கஞ்சா விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர்களில் மூன்று பேர் வட மாநிலத்திலிருந்து வருவார்கள் என்றும் அவர்களுடைய முகவரி தெரியாது என்றும் கூறியுள்ளார். தன்னுடன் இணைந்து கஞ்சா விற்பனை செய்யும் விக்னேஷ் என்பவர் திரிசூலம் பகுதியில் வசிப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து வெங்கடேசன் அளித்த முகவரியில் விக்னேஷைத் தேடி போலீசார் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனால் அவர் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது புல்லட் வாகனத்தில் விக்னேஷ் வந்துள்ளார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தபோது, வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடினார். இதைத் தொடர்ந்து வண்டியை பறிமுதல் செய்து அதிலிருந்த கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
புல்லட்டை போலீசார் பறிமுதல் செய்துவிட்டார்கள் என்ற தகவல் விக்னேசுக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவராக போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, “நீண்ட நாட்களாக புல்லட் வாங்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருந்தது. ஆசைப்பட்டு வாங்கிய கனவு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தார்கள் என்ற தகவல் தாங்க முடியவில்லை. அதனால் நான் சரண் அடைந்தேன். ஆறு மாதமாகத்தான் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தேன். ஆந்திராவிலிருந்து வாங்கிவந்து விற்பனை செய்துவந்தேன்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் வெங்கடேசன். விக்னேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூன்று வடமாநில நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.