கனமழையால் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு: கோவையில் சோகம்!

 

கனமழையால் வீடு இடிந்து விழுந்து 9 பேர்  உயிரிழப்பு: கோவையில் சோகம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிழக்கு திசை காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுவீடு ஒன்று இடிந்து விழுந்தது. சுமார் 12  பேர் உறங்கிக்கொண்டிருந்த இந்த வீட்டில் அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில்,  4 பெண்கள், சிறுமி என 9 பேர்  பலியாகியுள்ளனர். மீதமுள்ள 3 பேரின் நிலை  குறித்து இன்னும் விவரம் தெரியவில்லை. 

ttn

இந்நிலையில் விபத்து குறித்த  தகவலறிந்து சென்ற வட்டாட்சியர், போலீசார் மற்றும் மீட்பு படையினர்  தொடர்ந்து அங்கு மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் கம்மியம் பேட்டையில் மழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை உள்பட மூவர் பலியானது  குறிப்பிடத்தக்கது.