கனடா தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள சுபஸ்ரீ : கலங்க வைக்கும் செய்தி!

 

கனடா தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள சுபஸ்ரீ : கலங்க வைக்கும் செய்தி!

பேனர் விழுந்து உயிரிழந்த  சுபஸ்ரீ  கனடா செல்வதற்கான தேர்வில்முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி கண்கலங்கச் செய்துள்ளது. 

பேனர் விழுந்து உயிரிழந்த  சுபஸ்ரீ  கனடா செல்வதற்கான தேர்வில்முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி கண்கலங்கச் செய்துள்ளது. 

கடந்த 13 ஆம் தேதி  சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது  அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவம் அங்கிருந்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது. இந்த விவகாரத்திற்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும்   எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.

suba

சுபஸ்ரீ பி.டெக் படித்து கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கனடா சென்று மேற்படிப்பு படிப்பதைக்  கனவாகக் கொண்டிருந்த அவர் அதற்கான தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தார். 

 

suba

இந்நிலையில்  கனடா செல்வதற்காக எழுதியிருந்த தேர்வில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த செய்தி அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீயின் நீண்ட நாள் கனவு, வெறும் கனவாகவே போய்விட்டது வருத்தத்திற்குரியது.