கத்திரி வெயில் நாளையுடன் முடிகிறது… ஆனாலும்,அடுத்த மூன்று நாட்களுக்கு நிலமை மோசமாகத்தான் இருக்குமாம்! 

கத்திரி வெயில் நாளையுடன் முடிகிறது… ஆனாலும்,அடுத்த மூன்று நாட்களுக்கு நிலமை மோசமாகத்தான் இருக்குமாம்! 

கடந்த நாலாம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது. அப்பாடா…,இனிமேல் நிம்மதியா இருக்கலாம் என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்திராதீங்க.முடிந்து போகும் போது ஒரு காட்டு காட்டிவிட்டுதான் போகும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்திருக்கிறது.

பல ஊர்களில் வெப்பம் கடுமையாக இருக்கிறது.ஆங்காங்கே மழையிலும் வெளுத்து வாங்கினாலும்,தமிழக உள் மாவட்டங்கள் பல இடங்களில் இருவரை இருந்த அளவைவிட பகல் நேர வெப்பநிலை 6 டிகிரி செல்ஸியஸ் அதிகமாகவே இருக்குமாம்.அதனால்,வருகிற மூன்று நாட்களிலும் காலை 11 மணி முதல் 4 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மய்யம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது.சென்னையைப்  பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்..