கதை திருட்டு போயி புகைப்படம் திருட்டு… புகார் கூறும் இயக்குநர்! புது சிக்கலில் விஜய் படம்!! 

 

கதை திருட்டு போயி புகைப்படம் திருட்டு… புகார் கூறும் இயக்குநர்! புது சிக்கலில் விஜய் படம்!! 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படமான  மாஸ்டர் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படமான  மாஸ்டர் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.  நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இந்த படத்தில்  விஜய் மீசையில்லாமல் நடிப்பதாக தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் தாதா 87 படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ விஜய்யின் இந்த கெட்டப் என்னுடைய புகைப்படத்திலிருந்து திருடப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் மீசையில்லாமல்2019அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்தி புகைப்படம்
வெளியிட்டேன். தந்தி செய்தி பார்த்தேன்  மாஸ்டர் படத்தில் என்  கற்பனை நிஜமாக்கிய  லோக்கேஷ் மற்றும் விஜய்க்கு நன்றி 
திரையில்காண கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவனாக
காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.