கண்டெய்னர் லாரியில் ராஜஸ்தான் செல்ல முயன்ற 26 இளைஞர்கள் சிக்கினர்!

 

கண்டெய்னர் லாரியில் ராஜஸ்தான் செல்ல முயன்ற 26 இளைஞர்கள்  சிக்கினர்!

அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே  3 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டிக்க மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது. 

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே  3 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டிக்க மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது. இதனால் மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில்  கரூரில் இருந்து பெங்களூர் செல்லும் கண்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற  ராஜஸ்தானை சேர்ந்த 26 இளைஞர்கள் பதுங்கி கண்டுபிடிக்கப்பட்டது. 

tt

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில்  ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மற்றும் சித்தேடுகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள்  கடந்த மாதம் முதல் வாரத்தில் ஏஜென்ட் ஒருவர் மூலமாக, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அழைத்துவரப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.  ஊரடங்கு காரணமாக அவர்கள் ராஜஸ்தானுக்கே செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி 26  இளைஞர்களும் நடந்தே கேரளாவில் இருந்து  தேனி, திண்டுக்கல், வழியாக நடந்து வந்தபோது, அந்த வழியே வந்த கண்டெயனர் லாரியில்  உதவி கேட்டு ஏறியுள்ளது தெரியவந்தது. 

ttt

இதையடுத்து  ராஜஸ்தான்  இளைஞர்களை தனி வாகனம் மூலம் கந்தசாமி கண்டர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்து சென்று தங்க வைக்கபட்டுள்ளனர். அதேபோல் அவர்களுக்கு உதவி செய்த கன்டெய்னர் லாரி டிரைவர் சப்ஜீர் சிங் என்பரையும் முகாமக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.