கண்டிப்பா லவ் மேரேஜ் தான்: விஷால் அதிரடி!

 

கண்டிப்பா லவ் மேரேஜ் தான்: விஷால் அதிரடி!

நடிகர் விஷால் கண்டிப்பாக தனது திருமணம் காதல் திருமணம் தான் என தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஷால் கண்டிப்பாக தனது திருமணம் காதல் திருமணம் தான் என தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் நீண்ட நாட்களாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதை தனது குறிக்கோளாக வைத்திருக்கும் நடிகர் விஷால், சங்க கட்டிடத்தில் தான் தனது திருமணம் என பகிரங்கமாக அறிவித்தார்.

nadigarsangam

நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் முடிந்தபாடில்லை. இந்நிலையில், சன் டிவியில் ‘சன் நாம் ஒருவர்’ என்ற சமூக பிரச்னைகளை பேசும் நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார்.

டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று நிவாரண உதவிகளை விஷாலும், சமுத்திரக்கனியும் இணைந்து செய்கின்றனர். அப்போது விஷாலிடன் அங்குள்ளவர் சில கேள்விகளை கேட்கின்றனர். அதில் ஒரு பெண் சிரித்துக் கொண்டே விஷாலின் திருமணத்தை பற்றி கேள்வி கேட்கிறார்.

இந்த கேள்வியை பாதியிலேயே நிறுத்திய விஷால், நீங்க என்ன கேட்க போறீங்கன்னு நல்லா தெரியும். என் கல்யாணம் கண்டிப்பா லவ் மேரேஜ் தான் என உறுதியாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ புரொமோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

vishal

ஏற்கனவே நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்று விஷால் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவிய நிலையில், விஷால் லவ் மேரேஜ் என கூறியிருப்பது யாரை மனதில் வைத்துக் கொண்டு பேசினார் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.