கண்டவங்க மேல கேஸ்போட இது ஒன்னும் இந்தியா இல்லை! – சாட்டையை சுழற்றிய பாக். நீதிபதி

 

கண்டவங்க மேல கேஸ்போட இது ஒன்னும் இந்தியா இல்லை! – சாட்டையை சுழற்றிய பாக். நீதிபதி

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் அத்தர் மினல்லா. பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த அவாமி வொர்க்கர்ஸ் பார்ட்டி என்ற கட்சியைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவ செய்யப்பட்டது

அரசை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காக வழக்குத் தொடர இது ஒன்றும் இந்தியா இல்லை என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pakistan judge

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் அத்தர் மினல்லா. பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த அவாமி வொர்க்கர்ஸ் பார்ட்டி என்ற கட்சியைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவ செய்யப்பட்டது. இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அத்தர், “ஒவ்வொருவரின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் போராட்டக்காரர்களின் அரசியலமைப்பு உரிமையை இந்த நாடு மீறியுள்ளது” என்றார்.