கண்டவங்ககிட்ட கருத்து கேட்டு கடுப்பேத்தாதீங்க…மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக..!?

கண்டவங்ககிட்ட கருத்து கேட்டு கடுப்பேத்தாதீங்க…மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக..!?

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகுதான் அதிமுக-வில் பலபேர் எப்படி, எப்படியெல்லாம் பேசுவார்கள்… உளறுவார்கள் என்பதே பலருக்கும் தெரியவந்தது! அதிலும் சில அமைச்சர்கள் உளறலின் உச்சமாகவும் போய் மீம்ஸில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிற காமெடியையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

admk

இனிமேல்,அந்த மாதிரி யாரும் பொது வெளியில் கட்சியைப் பத்தி கருத்து சொல்லக்கூடாது என்று நேற்று நடந்த உயர்மட்ட கூட்டத்துக்குப் பிறகு சொல்லப்பட்டது.இன்று இன்னும் ஒரு லெவல் மேலே போய்,மீடியாக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறது அதிமுக தலைமை!
கட்சித் தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுக-வின் கருத்தை கேட்டால் மீடியாக்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் ‘அதிமுக-வின் பிரதிநிதிகள் என்றோ,அதிமுக-வின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும் யாரையும் ஊடக வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ,அனுமதிக்கவோ வேண்டாம். அவ்வாறு மீறும்பட்சத்தில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கும் செய்திகளுக்கும் அதிமுக எந்த வகையிலும் பொறுப்பேற்காது.இதுசம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்தமாட்டீர்கள் என நம்புகின்றோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

media

ஸோ,டிபேட் என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத ஆட்களை அழைத்து,அவர்கள் உளறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எச்சரித்திருக்கிறது அரசு… பாத்து செய்யுங்க மக்கா…