கண்காணிக்கத் தவறிய மாவட்ட நிர்வாகம்? – தேனியில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்!

 

கண்காணிக்கத் தவறிய மாவட்ட நிர்வாகம்? – தேனியில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்!

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் நபர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கத் தவறியதால் தேனியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் நபர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கத் தவறியதால் தேனியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக மாறியது தேனி. இதனால், ஆரஞ்சு மண்டலமாக மாறிக்கொண்டிருந்த தேனியில் ஒரே நாளில் ஏழு பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona-check-89

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் குஜராத் மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர் ஆவார். குஜராத்தில் இருந்து ரயிலில் வந்த அவர் திண்டுக்கல்லில் இறங்கியுள்ளார். அவரை அவரது சகோதரர் மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். குஜராத்தில் இருந்து வந்த செய்தி அறிந்து சுகாதாரப் பணியாளர்கள் வந்து சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 
அதேபோல், சென்னை கோயம்பேடுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர், தொழிலாளர்கள் ஆறு பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் ஒருவர், மதுக்கடை திறக்கப்பட்டபோது வரிசையில் நின்று மது வேறு வாங்கியுள்ளார். அவர் அருகில் நின்றவர்கள் யார் என்று கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால், இன்னும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

corona-theni

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தேனிக்கு வருபவர்களை மாவட்ட நிர்வாகம் சோதனை செய்து அனுமதித்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனக்குறைவு காரணமாகத் தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதை மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. கண்காணிப்பு தீவிரமாக உள்ளது என்று விளக்கம் அளிக்கும் மாவட்ட நிர்வாகம், வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து தேனிக்கு வந்தவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். வீட்டுத் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் அவர்கள் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்றும் எச்சரிக்கின்றனர்.