கணவரை கூட உதவிக்கு அழைக்காமல் ‘தனக்கு தானே பிரசவம்’ பார்த்து கொண்ட இளம்பெண்…எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நடந்த சம்பவம்!

 

கணவரை கூட உதவிக்கு அழைக்காமல் ‘தனக்கு தானே பிரசவம்’ பார்த்து கொண்ட இளம்பெண்…எழும்பூர்  ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நடந்த சம்பவம்!

மறுநாள் காலை தான் ரயில் புறப்படும் என்பதை அறிந்து அங்கேயே நடைமேடையிலேயே தங்கியுள்ளனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே உள்ள பாப்பநாடுபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா நிறைமாத  கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  இந்த தம்பதி வேலைநிமித்தமாக சொந்த சென்னை வந்துள்ளனர். அப்போது ஊர் திரும்ப எழும்பூர் ரயில் நிலையம் வந்த அவர்கள் மறுநாள் காலை தான் ரயில் புறப்படும் என்பதை அறிந்து அங்கேயே நடைமேடையிலேயே தங்கியுள்ளனர். 

ttn

அப்போது திடீரென ரம்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட அவர் தனது கணவரை கூட உதவிக்கு அழைக்காமல் தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்டுள்ளார். மறுநாள் காலையில்  கணவரிடம் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் அதிகாரி சரோஜ்குமாருக்கு இந்த விஷயம் தெரியவர அவர் உடனடியாக அவரச சிகிச்சை மையத்துக்குத் தகவல் சொல்ல ரம்யாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

ttn

இதை தொடர்ந்து   குழந்தை, தாய் ரம்யா இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் அப்பகுதியிலிருந்த மக்களுக்கும், மருத்துவர்களுக்கும்   வியப்பை ஏற்படுத்தியுள்ளது.