கணவரை ஆபாச வீடியோவை பார்க்க சொல்லி வற்புறுத்தும் மனைவி…கடைசியில் வீடியோவில் இருந்ததே அந்த அம்மணி தான்!

 

கணவரை ஆபாச வீடியோவை பார்க்க சொல்லி வற்புறுத்தும் மனைவி…கடைசியில் வீடியோவில் இருந்ததே அந்த அம்மணி தான்!

வேறுபெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்று பெண் டாக்டர் கணவரிடம் கூறியே திருமணம் செய்துள்ளார். 

கொல்கத்தாவை சேர்ந்த 32 வயதான பெண் டாக்டர்  கடந்த 2018-ம் ஆண்டு திருமண இணையதளம் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயரை திருமணம் செய்துகொண்டார். பின்பு பெங்களூரில் வசித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு தான் ஒருவரை காதலித்தேன் அவர் வேறுபெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்று பெண் டாக்டர் கணவரிடம் கூறியே திருமணம் செய்துள்ளார். 

ttn

திருமணத்திற்கு பிறகு பெண் டாக்டர் நிறைய ஆபாச படங்களை பார்த்துள்ளார். மேலும் அவரது  கணவரையும் பார்க்கச்சொல்லி வற்புறுத்தியதோடு அதில் இருப்பதை  போலவே என்னிடம் நடந்துகொள்ளவேண்டும் என்று கூறி டார்ச்சர் செய்துள்ளார். இதனால் கணவரும் மனைவியின் தொல்லை தாங்காமல் அந்த படங்களை பார்த்ததாக தெரிகிறது. 

இதற்கிடையே, மனைவியின் செல்போனை ஒருநாள் அவரது கணவர் எடுத்து பார்க்க அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம்  அதில் இருந்த ஆபாச வீடியோவில் இருந்தது பெண் டாக்டர் தான். இதுகுறித்து கேட்ட போது, நான்  அவரை தான் காதலித்தேன். ஒருவேளை எதிர்காலத்தில் வழக்குகளை எதிர்கொள்ள தேவைப்படும் என்று அதை வீடியோவாக எடுத்து வைத்தேன்’ என்று  கூற என்ன செய்வதென்று தெரியாத அந்த கணவர் அமைதியாக இருந்துள்ளார். 

ttn

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் மனைவியின் தொல்லையால் இணையத்தில் ஆபாச வீடியோக்கள் பார்த்தபோது அதிலிருந்தது தனது  மனைவி என்பதை தெரிந்துகொண்ட கணவர்  இதுபற்றியும் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு, “திருமணத்திற்கு முன்பு தான் பலருடன் தொடர்பிலிருந்தேன். இந்த வீடியோ எப்படி இணையத்தில் வெளியானது என்று தெரியாது” என்று சொல்லவே கடுப்பான கணவன் பெண் டாக்டரை விட்டுவிட்டு சென்றுள்ளார்.

இதன் பின்னர் பெண் டாக்டரோ, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் குடும்பநல ஆலோசனை மையத்தை நாடினார். அவர்களுக்கு  மூத்த ஆலோசகர் பி.எஸ். சரஸ்வதி  கவுன்சிலிங் கொடுத்து வருகிறார். கணவரோ விவாகரத்து வேண்டும் என்று கேட்க, பெண் டாக்டரோ கடந்த காலத்தை மறந்து வாழலாம் என்றும் கூறி வருகிறார்களாம்.