கட்-அவுட் வரலாற்றிலும் தோனியை முதல் இடம் பிடிக்க வைத்த கேரள ரசிகர்கள்!

 

கட்-அவுட் வரலாற்றிலும் தோனியை முதல் இடம் பிடிக்க வைத்த கேரள ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு அவரது ரசிகர்கள் ராட்சச கட்-அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு அவரது ரசிகர்கள் ராட்சச கட்-அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 5வது ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற இருக்கிறது. அந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் திருவனந்தபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், திரையரங்குகளுக்கு முன் சினிமா நட்சத்திரங்களுக்கு கட்-அவுட் வைப்பது போல் மைதானத்திற்கு முன் தோனிக்கு 35 அடி உயரத்தில் அவரது ரசிகர்கள் கட்-அவுட் அமைத்துள்ளனர். 

dhoni cutout

 

அந்த வகையில், ஒரு கிரிக்கெட் வீரருக்கு மைதானத்திற்கு முன் கட்-அவுட் அமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.