கட்டுக்கடங்காத ‘குடி’மகன்கள் – திறந்த சிலமணி நேரங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள்

 

கட்டுக்கடங்காத ‘குடி’மகன்கள் – திறந்த சிலமணி நேரங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள்

‘குடி’மகன்கள் அதிகளவில் கூடியதால் டெல்லியில் திறக்கப்பட்ட மதுக்கடைகள் சில மணி நேரத்திலேயே மீண்டும் மூடப்பட்டன.

டெல்லி: ‘குடி’மகன்கள் அதிகளவில் கூடியதால் டெல்லியில் திறக்கப்பட்ட மதுக்கடைகள் சில மணி நேரத்திலேயே மீண்டும் மூடப்பட்டன.

இன்று காலை நாட்டில் சில பகுதிகளில் மட்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மதுபானம் வாங்கும் வெறியில் குடிமகன்கள் அதிகளவில் மதுக் கடைகளில் கூடியதால் டெல்லியில் திறக்கப்பட்ட பல மதுக் கடைகள் சில மணி நேரங்களிலே மீண்டும் மூடப்பட்டது.

கொரோனா வைரஸின் பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கொரோனா அதிகம் பரவிய கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் தனித்தனி மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க முடியும் என்று நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

tasmac

இதனால் பல மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று காலை மதுக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் 40 நாட்களாக மது அருந்த முடியாமல் வெறியில் இருந்த ‘குடி’மகன்கள் அதிகாலையில் இருந்தே மதுக் கடை வாசல்களில் முகாமிட்டனர். ஒருவருக்கொருவர் ஆறடி இடைவெளி விட்டு நின்று மது வாங்க வேண்டும் என்ற உத்தரவுகள் காற்றில் பறந்தது. அதனால் கொரோனா தொற்று அபாயம் எழுந்ததால் திறக்கப்பட்ட மதுபான கடைகள் சில மணி நேரங்களிலே மீண்டும் மூடப்பட்டது. அத்துடன் பலர் பெட்டி, பெட்டியாக மதுபானங்களை வீட்டுக்கு வாங்கிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறியது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தூர், போபால், உஜ்ஜைன் போன்ற நகரங்களைத் தவிர மத்தியப் பிரதேசத்தில் நாளை முதல் மது விற்பனை தொடங்க உள்ளது.