கட்டிடங்கள் இடிந்து மேற்கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகும் அரசுப்பள்ளிகளின் அவல நிலை..!

 

கட்டிடங்கள் இடிந்து மேற்கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகும் அரசுப்பள்ளிகளின் அவல நிலை..!

அரசுப் பள்ளிகளை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் என்ன தான் கோரிக்கையை முன் வைத்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை, தனியார் பள்ளிகளைக் காட்டிலும் மோசமான நிலையிலே தான் உள்ளது. ஒழுங்காக பராமரிக்கப் படாத கட்டிடம், இடிந்து விழுந்து காணப் படும் மேற்கூரைகள் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளின் அவல நிலையால் பெரும்பாலான பெற்றோர்கள் தனது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை. அரசுப் பள்ளிகளை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் என்ன தான் கோரிக்கையை முன் வைத்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 

Government schools

திருச்சி மாவட்டம், சிங்களாபுர கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தும், மழை பெய்தால் உடைந்த மேற்கூரையிலிருந்து வகுப்பறைக்குள்ளே நீர் புகுந்து விடுகிறது என்றும் வகுப்பறைகள் சீராகப் பராமரிக்கப் படுவதில்லை என்றும் பள்ளியில் சுகாதாரம் ஒழுங்காகப் பராமரிக்கப் படாததால் குழந்தைகளுக்கு நோய் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பொது மக்கள் புகார் அளித்துள்ளனர். 

Government schools

மேலும், 8 மாணவர்களே அந்த பள்ளிக் கூடத்தில் படித்து வந்த நிலையில் தற்போது 33 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆர்வத்துடன் படிக்க வரும் ஏழை மாணவர்களுக்குப் படிப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருமாறு அரசிடம் சிங்களாபுர கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.