கட்சியை உதறி விட்டு வெளியே வாங்க பாஸ்….. காங்கிரஸ் தலைவரை உசுப்பேத்தும் பா.ஜ.க.

 

கட்சியை உதறி விட்டு வெளியே வாங்க பாஸ்….. காங்கிரஸ் தலைவரை உசுப்பேத்தும் பா.ஜ.க.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததால் அந்த கட்சியை விட்டு ஜோதிராதித்ய சிந்தியா வெளியே வர வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் வலியுறுத்தினார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை 10 நாளில் தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் அரசு முழுமையாக காப்பாற்றவில்லை.

கமல் நாத்

இதனையடுத்து எதிர்க்கட்சியான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத் தலைமையிலான அரசு சொன்னப்படி முழுமையாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என  குற்றச்சாட்டினார். சிந்தியாவின் பேச்சு பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்து விட்டது. பா.ஜ.க.வோ அல்லது பொதுமக்களோ அல்ல அவரது சொந்த கட்சியினரே முதல்வர் கமல்நாத் முன்னால் கண்ணாடி காட்டுகின்றனர். அதை பார்த்தாவது கமல்நாத் தனது தவறை திருத்தி கொள்ள வேண்டும் என பா.ஜ.க. விமர்சனம் செய்தது.

கோபால் பார்கவா

இந்நிலையில், எதிர்கட்சி தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான கோபால் பார்கவா இது குறித்து கூறுகையில், தனது கட்சி அரசின் தோல்வியால் உண்மையில் சிந்தியா சங்கடப்பட்டால் அந்த கட்சியை விட்டு அவர் வெளியே வர வேண்டும் என வலியுறுத்தினார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ்வார் சர்மா கூறுகையில், காங்கிரஸ் ஒரு நாடோடி கட்சி என விமர்சனம் செய்தார்.