கட்சியும் போச்சு, சின்னமும் போச்சு… தேமுதிகவின் பரிதாப நிலை!!

 

கட்சியும் போச்சு, சின்னமும் போச்சு… தேமுதிகவின் பரிதாப நிலை!!

தேமுதிகவின் மாநில கட்சி அந்தஸ்தை நீக்குவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேமுதிகவின் மாநில கட்சி அந்தஸ்தை நீக்குவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு, மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெற வேண்டும். அதோடு, ஒரு மக்களவைத் தொகுதி அல்லது 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதும் தேர்தல் ஆணையத்தின் விதி. கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 8.38 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

அதற்கடுத்து 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு 10.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 7.9ஆக குறைந்தது. 2014ல் அது 5.1ஆக சரிந்தது. தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.39 ஆனது.  இந்த நிலையில்,2019 மக்களவைத் தேர்தலிலும் வாக்கு சதவிகிதம் 2 புள்ளி 19 ஆக குறைந்துள்ளது.

தொடர்ந்து 2 ஆவது முறையாக 3 சதவிகிதத்திற்கும் குறைவாக வாக்கு சதவிகிதம் பெற்றிருப்பதால் தேமுதிகவின் மாநில கட்சி அந்தஸ்து ரத்தாக உள்ளது. இதற்கான பணிகளை தொடங்கியுள்ள மாநில தேர்தல் ஆணையம் விரைவில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளது.மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கை பெற்ற உடன் தலைமை தேர்தல் ஆணையம் தேமுதிகவுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் தரப்பு தகவல்களை பெற்று மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை நீக்கும். மாநில கட்சி அங்கீகாரம் ரத்தாவதால் முரசு சின்னமும் பறி போய்விடும்.