கட்சியில் உழைத்தவர்களுக்கே இனி சீட்! – மாபா பாண்டியராஜன் பேச்சால் சிரிப்பு

 

கட்சியில் உழைத்தவர்களுக்கே இனி சீட்! – மாபா பாண்டியராஜன் பேச்சால் சிரிப்பு

ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா ஆவடியில் கொண்டாடப்பட்டது.விழாவில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பங்கேற்றுப் பேசினார்.அப்போது அவர், “இன்னும் ஓரிரு வாரங்களில் பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

கட்சியில் உழைத்த தொண்டர்களுக்கே இனி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தே.மு.தி.க-வில் இருந்து வெளியேறித் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இணைந்து அமைச்சரான மாபா பாண்டியராஜன் கூறியிருப்பது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா ஆவடியில் கொண்டாடப்பட்டது.விழாவில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பங்கேற்றுப் பேசினார்.அப்போது அவர், “இன்னும் ஓரிரு வாரங்களில் பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சித் தொண்டர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும்.பணம் உள்ளவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது, இம்முறை கட்சிப் பணியில் ஈடுபட்ட நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.
மாபா பாண்டியராஜன் பா.ஜ.க, தே.மு.தி.க என்று பல கட்சிகளிலிருந்துவிட்டு தற்போது அ.தி.மு.க-வில் உள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு விஜயகாந்த் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி, அ.தி.மு.க-வுக்கு சாதகமாகச் செயல்பட்டார். தேர்தல் வந்தபோது, அ.தி.மு.க-வில் இணைந்து மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். ஓ.பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்தபோது யாரும் எதிர்பாராத நிலையில் மாபா பாண்டியராஜனும் அவருடன் சென்றார். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.