கட்சிகள் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது – தேர்தல் ஆணையம் உத்தரவு

கட்சிகள் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது  – தேர்தல் ஆணையம் உத்தரவு

நாடு முழுவதும் தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் போட்டி போட்டு பிரசாரங்களில் இறங்கியுள்ளனர். எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள் வாகு சேகரிப்புகள் என கலை கட்டி வருகிறது.

public meeting

கோடையும், மக்களவைத் தேர்தலும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், பொதுமக்களின் நலன் கருதி, மதிய நேரத்தில் அதுவும் அதிக வெயில் நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த வேண்டாம்.

bjp

இதுபோல மதிய நேரத்தில் நடத்தும் பொதுக்கூட்டங்களால் பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, கடும் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கட்சிகளையும், வேட்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.