கடைக்கு என்ன பெயர் சரியாக இருக்கும்? – ஆராய்ச்சியில் இறங்கிய டாக்டர் ராமதாஸ்

கடைக்கு என்ன பெயர் சரியாக இருக்கும்? – ஆராய்ச்சியில் இறங்கிய டாக்டர் ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று இரண்டு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் ஓர் பேரங்காடியின் பெயர் More Supermarket. ஏராளமான பொருட்கள் கிடைக்கும் பேரங்காடி என்பது அதன் பொருள். ஆனால், தமிழில் மோர் சூப்பர் மார்க்கெட் என்று  ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். விட்டால் அடுத்து தயிர் சூப்பர்மார்க்கெட் என்று கூட பெயர் வைத்து விடுவர் போலிருக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும் நிலையில், புதிதாக கடைக்கு பெயர் வைப்பது தொடர்பான கருத்து ஒன்றை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருப்பது நகைப்புக்குள்ளாகி உள்ளது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று இரண்டு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் ஓர் பேரங்காடியின் பெயர் More Supermarket. ஏராளமான பொருட்கள் கிடைக்கும் பேரங்காடி என்பது அதன் பொருள். ஆனால், தமிழில் மோர் சூப்பர் மார்க்கெட் என்று  ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். விட்டால் அடுத்து தயிர் சூப்பர்மார்க்கெட் என்று கூட பெயர் வைத்து விடுவர் போலிருக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது ட்வீட்டில், “எம்ஜிஆர் காலத்து அரசாணைப்படி ஒரு கடையின் பெயர் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்தால், தமிழில் அப்படியே எழுதாமல் மொழிபெயர்த்து எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விருப்பம் போல பெயர் வைத்து, விருப்பமான மொழியில் எழுதுகின்றனர்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸின் இந்த ட்வீட்களுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒருவர், இந்த விசயத்தை முக்கியப்படுத்திப் பேசும் அளவுக்கு நாட்டில் வேற பிரச்சனையே இல்லை மருத்துவர் அய்யாவுக்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், “பெரியய்யா எங்க ஊர்ல “Chicken 65” ன்னு ஒரு சிக்கன் கடை இருக்கு, அப்போ அரசாணை படி “கோழி 65″ ன்னு வைக்கணுமாயா?” என்று கமெண்ட்டில் கிண்டல் செய்துள்ளார்.

மற்றொருவர் கொஞ்சம் கோபமாக, “ஐயா முதலில் தங்களின் பெயரை இராமனின் அடிமை (ராமதாஸ்) என்று மாற்றிவிட்டு பிறகு பொதுவெளியில் வாருங்கள். அவனவன் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரம் செய்தால் நடுவில் உங்களை கேட்டு கம்பெனிக்கு பேரு வெப்பானா?” என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக சிலரும் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.