கடேசிவரைக்கும் ‘ஏக் காவு மே ஏக் கிசான் ரகு தாத்தாதான்’!

 

கடேசிவரைக்கும் ‘ஏக் காவு மே ஏக் கிசான் ரகு தாத்தாதான்’!

ஒவ்வொரு இந்திய மாணவனுக்கும் மும்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், மாநில மொழி, ஆங்கிலம், மற்றொரு இந்திய மொழி என பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற‌ புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளது.

ஒவ்வொரு இந்திய மாணவனுக்கும் மும்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், மாநில மொழி, ஆங்கிலம், மற்றொரு இந்திய மொழி என பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற‌ புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. இதன்படி, இந்திபேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி கட்டாயம் என்றும், இந்தி தாய்மொழி இல்லாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம், மற்றும் இந்தி கட்டாயம் எனவும் கொள்கை வரைவை தயாரித்துள்ளது.

Hindi Imposition

யோகா, நீர்மேலாண்மை உள்ளிட்டவற்றையும் பாடமாக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை, nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுமீது ஏற்கெனவே செமகடுப்பில் இருக்கும் தமிழர்கள், பதவியேற்புக்கு முன்னால் நேசமணியை வைத்து ஒரு காட்டுகாட்டினார்கள். திரும்பவும் நம் மீம்ஸ்களுக்கு வேலை வந்துவிட்டது. ஒருவேளை இந்தி கட்டாயமாக்கப்பட்டால், நாம பேசுற இந்தியில், இந்தி வாத்தியாருக்கே இந்தி மறந்திடும் அளவுக்கு பேசுவோம். ஏக் காவு மே ஏக் கிசான் ரகு தாத்தா.