கடும் வெயிலினால் குளத்திலிருந்த மீன்கள் அனைத்தும் உயிரிழப்பு

கடும் வெயிலினால் குளத்திலிருந்த மீன்கள் அனைத்தும் உயிரிழப்பு

அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் டன் கணக்காக மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசியது.

அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் டன் கணக்காக மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசியது.

வட மேற்கு திசை காற்று வலுவாக வீசுவதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கடும் வெயிலின் வெப்பம் தாங்காமலும் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு மீன்கள் தண்ணீரில் செத்து மிதந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக வாட்டி வதைத்துவரும் வெப்பத்தால் குளத்தில் இருந்த ஜிலேபி,கண்டை,விரால்,கொரவை போன்ற மீன்கள் இறந்தன. மீன்கள் இறந்து கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உடனடியாக இறந்துகிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.