கடும் நெருக்கடி… கனத்த இதயத்தோடு கமலாலயத்தை காலி செய்த பொன்.ராதாகிருஷ்ணன்!

கடும் நெருக்கடி… கனத்த இதயத்தோடு கமலாலயத்தை காலி செய்த பொன்.ராதாகிருஷ்ணன்!

தமிழக பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை பொன்.ராதாகிருஷ்ணன் காலி செய்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். இவர் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது, டி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவருக்கு அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சராக இருந்ததால், தொடர்ந்து அந்த அறையை அவர் பயன்படுத்திவந்தார்.

officer

தற்போது அவர் மத்திய அமைச்சராகவும் இல்லை, தமிழக பா.ஜ.க நிர்வாகியாகவும் இல்லை. இதனால், அறையை காலி செய்து கொடுக்கும்படி கமலாலய நிர்வாகம் கூறிவந்துள்ளது. அந்த அறையை பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஒதுக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை காலி செய்ய மறுத்துவந்தார். வேறு யாருக்கும் அந்த அறையை விட்டுத் தரவும் தயாராக இல்லை என்று உறுதியாக இருந்தார். ஆனாலும், எச்.ராஜா தரப்பு இதை விட வில்லை. கட்சியில் எந்த உயர் பதவியிலும் இல்லாத பொன் ராதாகிருஷ்ணனுக்கு அறை உள்ளது… ஆனால் கட்சியின் தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜாவுக்கு அறை இல்லை. இதை ஏற்க முடியாது. உடனடியாக எச்.ராஜாவுக்கு அந்த அறையை ஒதுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டது. 

h.raja

தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு பொன் ராதாகிருஷ்ணனும் எச்.ராஜாவும் போட்டிப்போட்டு வந்தார்கள். இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், தமிழக பா.ஜ.க-வில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி, கிளை நிர்வாகிகள் தேர்தல் வரை எதுவும் முறையாக நடைபெறவில்லை என்பதால் தமிழக பா.ஜ.க தலைவரை நியமிக்காமல் காலம் கடத்தி வருகிறது மத்திய பா.ஜ.க. டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பொன் ராதாகிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் கட்சித் தலைமை கூறியுள்ளது.

pon radha

இதனால், பொன் ராதாகிருஷ்ணனை அறையை காலி செய்தே ஆக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்கள். வேறு வழியின்றி மன வேதனையுடன் பொன் ராதாகிருஷ்ணன் தன்னுடைய அறையை காலி செய்து கொடுத்துள்ளார் என்று கட்சிக்குள் பேசப்படுகிறது.