கடுமையாக தாக்கும் கொரோனா.. கவலையை மறக்க பால்கனியில் உல்லாசமாய் பாட்டுப்பாடும் இத்தாலி மக்கள் : வைரல் வீடியோ!

 

கடுமையாக தாக்கும் கொரோனா.. கவலையை மறக்க பால்கனியில் உல்லாசமாய் பாட்டுப்பாடும் இத்தாலி மக்கள் : வைரல் வீடியோ!

சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி தான்.

சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய வகை வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

ttn

உலக நாடுகள் மொத்தமாகச் சேர்த்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாகப் பல நாடுகளில் தொழில்கள் முடங்கியுள்ளது. 

tth

சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி தான். நூற்றுக் கணக்கான மக்கள் அங்கு கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் 250க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், மக்களின் கவலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ttn

அதனால் முடங்கி கிடக்காமல் சிசிலி என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் கவலையை மறந்து இருக்க,  அவரவர் வீட்டின் பால்கனியில் வந்து பாட்டுப் பாடி மகிழ்கின்றனர். தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ, காண்போரின் மனதைக் கணக்க வைக்கிறது.