கடுகு எண்ணெய்யில் எவ்வளவு  நன்மைகள் இருக்கு  தெரியுமா? 

கடுகு எண்ணெய்யில் எவ்வளவு  நன்மைகள் இருக்கு  தெரியுமா? 

கடுகு எண்ணெய் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சமையலறையில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. கடுகிலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கு,மேலும் இந்த எண்ணெய் கடுமையான மணத்தை கொடுள்ளதாய் இருப்பினும் அதன் மருத்துவ குணநலன்கள் ஏராளம். குறிப்பாக கடுகு எண்ணெய் குளிர்காலத்தில் மிகவும் நல்லது. இது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது.

கடுகு இல்லாத சமையலே இல்லை என்கிற அளவுக்கு  நம் வீட்டு சமையலில் முக்கிய பங்கு வைக்கிறது எல்லோருக்கும் தெரியும். கடுகு எண்ணெய்  பற்றியம் அதன்மருத்துவ குணநலன்களை பற்றியும் உங்களுக்கு  தெரியுமா? 

கடுகு எண்ணெய் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சமையலறையில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. கடுகிலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கு,மேலும் இந்த எண்ணெய் கடுமையான மணத்தை கொடுள்ளதாய் இருப்பினும் அதன் மருத்துவ குணநலன்கள் ஏராளம். குறிப்பாக கடுகு எண்ணெய் குளிர்காலத்தில் மிகவும் நல்லது. இது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது.

Mustard oil

கடுகு எண்ணெய்யின் நன்மைகள்:

1. கடுகெண்ணையிலுள்ள க்ளுகோசினோலைட் எனப்படும் காம்பௌண்ட் ஆன்டி-கார்சினோஜெனிக் தன்மைகளை கொண்டுள்ளதால் புற்றுநோயையை உருவாக்கும் ஜீன்சை எதிர்த்து போராடும்.

2. இது செஸ்ட் டீகன்ஜெஸ்ட்டின் (chest decongestion) க்கு மிகவும் நல்ல தீர்வு.

3. இந்த எண்ணெய்யில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கள், ஆன்டி வைரல் ப்ராபர்ட்டிஸ் இருப்பதால் இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

4. உடலின் செரிமான கோளாறுகளையும் சரி செய்ய வல்லது,இது இதயத்தின் நலனுக்கும் மிகவும் நல்லது.

5. கடுகெண்ணையையும், கற்பூரத்தையும் கலந்து அந்த கலவையை மார்பில் தடவினால் சளி இருமலிலிருந்து நிவாரணம் பெறலாம்.

6. இதிலுள்ள மோனோ அன்சாட்டுரேட்டட் கொழுப்பு கேட்ட கொழுப்பான LDL கொழுப்பை குறைக்க வல்லது.

7. இதுமட்டுமன்றி கடுகெண்ணெய் உங்கள் முக பொலிவிற்கும் மிகவும் நல்லது, இதிலுள்ள விட்டமின் E முகத்தில் ஏற்படும் கோடுகள் சுருக்கங்கள் ஆகியவற்றை குறைக்க வல்லது. 

8. குளிப்பதற்கு முன் கடுகெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் சரும வறட்சி நீங்கி ஆரோக்யமான தோற்றத்தைப் பெறலாம். 

oil bath

கடுகெண்ணெய்யின் நன்மைகளை தெரிந்துகொண்டிருப்பீர்கள், இதனை உங்க சமையலில் சேர்த்து நன்மைகளை பெறுங்கள்.