கடவுள் கொடுத்தாரு எடுத்தேன்… வடிவேலு பட பாணியில் கொள்ளையடித்ததை பலே திருடன்!

கடவுள் கொடுத்தாரு எடுத்தேன்… வடிவேலு பட பாணியில் கொள்ளையடித்ததை பலே திருடன்!

சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் ஜேக்கப். இவர் வணிகர் சங்க பேரமைப்பில் நிர்வாகியாக உள்ளார். இவர் கடந்த 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீட்டைப் பூட்டிவிட்டு தேவாலயத்துக்கு சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த 115 சவரன் நகை மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புடைய பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.

theif

வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நேரத்தில் சாமுவேல் வீட்டுக்கு டி.வி.எஸ் சூப்பர் எக்ஸ்.எல் வாகனத்தில் ஒருவர் வந்துள்ளார். அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த வாகனம் ஆரோக்கியம் என்பவர் பெயரிலிருந்தது தெரியவந்தது. உடனடியாக, ஆரோக்கியம் என்ற பெயரில் பழைய குற்றவாளிகள் யாராவது உள்ளார்களா என்று தேடியுள்ளனர். அப்போது சில மாதங்களுக்கு முன்பு அண்ணா நகாில் உள்ள ஏ.கே.எஸ் ஜுவல்லரியில் 5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த இருவரில் ஒருவன் பெயர் ஆரோக்கியம் என்பது தெரியவந்தது. 
உடனடியாக அவனைத் தேடிப்பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் தனக்கும் இந்த கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று முரண்டு பிடித்துள்ளான் ஆரோக்கியம். பிறகு போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டான். அதன்பிறகு அவன் சொன்ன தகவல்தான் வேடிக்கை…

cctv

சம்பவத்தன்று கடவுளை நினைத்துக்கொண்டு டி.வி.எஸ் எக்ஸ்.எல்-ல் சென்றுகொண்டிருந்தானாம். அப்போது, சாமுவேல் ஜேக்கப் வீட்டு வழியாக வந்தபோது, வீட்டின் வாசலில் மாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகை கண்ணை உறுத்தியுள்ளது. அதில், வணிகர் சங்க பேரமைப்பில் உயர் பதவியில் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததால், எப்படியும் வீட்டில் அதிக பணம், நகை இருக்கும் என்று நினைத்து எப்படி கொள்ளை அடிப்பது என்று திட்டமிட்டுள்ளான். அப்போது பார்த்து சாமுவேல் ஜேக்கப் குடும்பத்தினருடன் வெளியே புறப்பட்டுள்ளார். கடவுள் தனக்கு வழிகாட்டிவிட்டார் என்று உறுதி செய்துகொண்டு வீட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளான். அப்போது நாய் குரைக்கவே, என்ன செய்வது என்று யோசித்துள்ளான். அதற்கு குடிக்க தண்ணீர் கொடுக்கவே அது அமைதியாகிவிட்டது. ஆரோக்கியம் சாவகாசமாக வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டான். அதன்பிறகு வடிவேலு பட பாணியில், பீரோவைத் திறந்து பார்த்துள்ளான் ஆரோக்கியம். கட்டுக்கட்டாக ரூ.2000, 500 நோட்டுக்கள் இருந்துள்ளன. நகைகளும் இருந்துள்ளது. அவ்வளவையும் கடவுள் தனக்குக் கொடுத்த பரிசு என்று நினைத்து எடுத்துவந்துவிட்டானாம். 

money

சரி பணம், நகையை என்ன செய்தாய் என்று கேட்டபோது தன்னை ஜாமீனில் எடுக்க வக்கீலுக்கு ரூ.2 லட்சமும், அப்பாவின் பால் தொழிலுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் குறிப்பிட்ட ஆரோக்கியம், சாமுவேல் வீட்டில் 48 சவரன் நகைதான் எடுத்தேன், பேராசை காரணமாக அவர் 115 சவரன் என்று பொய் புகார் அளித்துள்ளார் என்றானாம். 
லட்சக்கணக்கில் பணம் கிடைத்த மகிழ்ச்சியில், புதிய ஷூ, டிரெஸ் என்று நிறைய வாங்கிக் குவித்துள்ளான். மேலும், கொள்ளையடித்த பணத்தில் ஒன்றரை லட்சத்தை வட்டிக்கு கொடுத்திருக்கிறானாம். கடைசியில் போராடி அவனிடமிருந்து ரூ.23 லட்சம் பணம், 48 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 
மீதி நகை பணத்தை எப்போது கிடைக்கும் என்று தெரியாமல் சாமுவேல் ஜேக்கப் விழிக்க… ஆரோக்கியம் இப்போது ஜெயிலில் உள்ளார்!