கடவுள் என்றால் அது கலைஞர்! ஸ்டாலினின் கண்களை குளமாக்கிய பெண்!! வைரலாகும் வீடியோ 

 

கடவுள் என்றால் அது கலைஞர்! ஸ்டாலினின் கண்களை குளமாக்கிய பெண்!! வைரலாகும் வீடியோ 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகமான இடங்களில் வெற்றிப்பெற்று வாகை சூடியது. அதன்படி தேர்தல் நடந்த அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், அதிகாரிகள் முன்பு உறுதிமொழியேற்று நேற்று பதவியேற்றனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகமான இடங்களில் வெற்றிப்பெற்று வாகை சூடியது. அதன்படி தேர்தல் நடந்த அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், அதிகாரிகள் முன்பு உறுதிமொழியேற்று நேற்று பதவியேற்றனர். அதே போல, பல்வேறு மாவட்டங்களில் வெற்றிப்பெற்ற வார்டு கவுன்சிலர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வார்டு உறுப்பினராக பதவியேற்ற ஒரு பெண்,  உறுதிமொழி யில் “கடவுள் அறிய” என சொல்வதற்கு பதில் கலைஞர் அறிய எனக்கூறி பதவியேற்றுக்கொண்டார். 

 

 

இதுகுறித்து ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்ற சகோதரி பார்வதி, ‘கலைஞர் அறிய’ என்று சொல்லிப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட காட்சி தந்த பெருமிதத்தால், என் கண்கள் குளமாயின!

கலைஞரின் உழைப்புக்கு எத்தகைய உயிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த சகோதரி! வாழ்த்துகள் பார்வதி!” என பதிவிட்டுள்ளார்.