கடலூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 

கடலூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயல் காரணமாக கடலூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

கடலூர்: கஜா புயல் காரணமாக கடலூர், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவான கஜா புயல், சென்னைக்கு கிழக்கே 580  கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 680 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போதைய நிலவரப்படி நிலை கொண்டுள்ளது.

இந்த நிலையானது வரும் 24 மணி நேரத்தில் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறும். பின்னர் வழுக்குறைந்து நாளை  பிற்பகலில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் போது அதிவேகமாக காற்று வீசும் எனவும், கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.