கடமை உணர்ச்சி கொஞ்சம் கூடுதலாப்போய், சர்ச்சையில் சிக்கிய காஞ்சி கலெக்டர்!

 

கடமை உணர்ச்சி கொஞ்சம் கூடுதலாப்போய், சர்ச்சையில் சிக்கிய காஞ்சி கலெக்டர்!

மத்த கேள்விக்கெல்லாம்கூட கலெக்டர் சுலபமா பதில் சொல்லிடுவார், இந்த வரிச்சியூர் செல்வம் மேட்டர்ல பெரிய பெரிய தலைகள் எல்லாம் உருளுமே என்ன செய்வார் கலெக்டர்? இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு, வேணும்னா கலெக்டர் ஆபிஸ்ல வச்சி எல்லார் முன்னாடியும் என்னை ஒருமையில பேசிக்குங்க, இந்த தகவல் எல்லாம் கேக்காதீங்கன்னு காம்ப்ரமைஸுக்கு வருவாரோ?

அத்திவரதர் தரிசனத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளர் சண்முகையாவை, பொது இடத்தில் வைத்து ஒருமையில் பேசி கடுமையாக நடந்துகொண்டார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. நாளொன்றுக்கு லட்சகணக்கான மக்கள் கூடும் நிகழ்வை இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தி திட்டமிடாத ஏமாற்றம், கோவம் எல்லாவற்றையும் தனியாக சிக்கிக்கொண்ட ஒரு ஆய்வாளரிடம் காட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார் கலெக்டர். ஆனால், அதே  நிகழ்வு அவருக்கே எதிராக வரும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். பொது இடத்தில் வைத்து அதிகாரியை தரக்குறைவாக பேசியதற்கு விளக்கம் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமா, தன் பங்குக்கு ஆய்வாளர் சண்முகையாவும் கலெக்டருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் ஆர்.டி.ஐ.மூலம்.

Collector scolding Inspector in public

காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரியிடம், சில தகவல்களைக் கேட்டு மனு அளித்துள்ளார் ஆய்வாளர் சண்முகையா. 1.  அத்திவரதர் தரிசனத்தி‌ல் பொது தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பிரிக்கப்படுவது எந்தச் சட்டத்தின் கீழ் வருகிறது? 2. விஐபி மற்றும் விவிஐபி தரிசன பிரிவுகளில் யார் யார் அனுமதிக்கத்தக்கவர்கள்? 3. அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டு‌ம்? 4. அத்திவரதர் வைபவத்தில் விஐபி, விவிஐபி பிரிவுகளில் தரிசனம் செய்தவர்களின் விவரங்கள். 5. விவிஐபி பிரிவில் சென்ற வரிச்சூர் செல்வத்துக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் எந்த அடிப்படையில் விவிஐபி பாஸ் கொடுத்துள்ளார்? 6. பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினரை பொதுஇடத்தில் ஒருமையில் பேச எந்தச் சட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?, 7. ஆட்சியர் தன் கீழ்நிலையில் பணியாற்றும் ஊழியர்களை ஒருமையில் பேச முடியுமா? போன்ற இக்கட்டான தகவல்களை கேட்டுள்ளார். மத்த கெள்விக்கெல்லாம்கூட கலெக்டர் சுலபமா பதில் சொல்லிடுவார், இந்த வரிச்சியூர் செல்வர் மேட்டர்ல பெரிய பெரிய தலைகள் எல்லாம் உருளுமே என்ன செய்வார் கலெக்டர்? இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு, வேணும்னா கலெக்டர் ஆபிஸ்ல வச்சி எல்லார் முன்னாடியும் என்னை ஒருமையில பேசிக்குங்க, இந்த தகவல் எல்லாம் கேக்காதீங்கன்னு காம்ப்ரமைஸுக்கு வருவாரோ?